உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து

கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து

திருமுருகன்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பூண்டி ரோட்டரி சார்பில், பூந்தளிர் திட்டத்தின் கீழ், 50 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கனிமொழி, பூண்டி ரோட்டரி தலைவர் டாக்டர் கார்த்திகேயன், செயலாளர் முகமது இப்ராஹிம், பொருளாளர் சக்கரபாணி, முன்னாள் தலைவர் டாக்டர் ஹரிவீர விஜயகாந்த், திட்ட தலைவர்கள் பூங்கொடி, பத்மாவதி, திருமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கர்ப்பிணிகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து முறை குறித்தும், பேறு காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சி குறித்தும், தாய்ப்பாலின் முக்கியத்துவம், முறையான தடுப்பூசிகள் குழந்தைக்கு வழங்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை