உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை வழக்கில் ஒருவர் கைது

கொலை வழக்கில் ஒருவர் கைது

திருப்பூர்:குன்னத்துார், கருங்கல்மேட்டில் கடந்த 4ம் தேதி, 45 வயது மதிக்க ஆண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இறந்தவர் திருப்பூரை சேர்ந்த சந்திரன், 50 என்பது தெரிந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். இறந்தவரின் மனைவி பார்வதி, 40 என்பவருக்கும், திருப்பூரில் வசிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த ரவி, 52 என்பவருக்கும் தொடர்பு இருந்துவந்தது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்து வந்தார்.இதுகுறித்து மனைவி பார்வதி, 'கணவரை கொன்றால் தான், நாம் சேர்ந்து வாழ முடியும்' என ரவியிடம் கூறியுள்ளார். கடந்த, 2ம் தேதி கருங்கல்மேட்டில் மதுக்கடை அருகில் தனியாக மது அருந்தி கொண்டிருந்த சந்திரன் தலையில், பெரிய கல்லை போட்டு சந்திரன் கொலை செய்தார். இதற்கு உடந்தையாக பார்வதி இருந்தது தெரிந்தது. கொலை தொடர்பாக மனைவியை கைது செய்த நிலையில், நேற்று ரவியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி