உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார்கள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

கார்கள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் அருகே கணியூர், ஸ்கூல் வீதியை சேர்ந்த கல்யாணசுந்தரம், 82. நேற்று முன்தினம் காலை, உடுமலை - தாராபுரம் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார்.துங்காவி வாய்க்கால் பாலம் அருகே, எதிரே வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த கல்யாண சுந்தரம், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த செல்வராஜிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை