உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரே வெங்காயம்... பல விலை!

ஒரே வெங்காயம்... பல விலை!

திருப்பூர்;சின்ன வெங்காயம் வரத்து இயல்புக்கு திரும்பியுள்ளதால், கடந்த ஒரு மாதமாக விலை உயர்வு இல்லாமல், கிலோ, 40 முதல், 50 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. ஆனால், மைசூரில் இருந்து வெங்காயம் வாங்கி வரும் சில மொத்த வியாபாரிகள் மூன்று கிலோ, 100 ரூபாய் என, விற்கின்றனர்.இது ஒரு புறமிருக்க காய்கறி கடை, தள்ளுவண்டிகளில் சின்ன வெங்காயம் கிலோ, 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் தான் இப்படி என்றால், பெரிய வெங்காயம் மொத்த விற்பனை யகங்களில், 50 முதல், 65 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது.வடமாநிலத்தவர் அதிகளவில் பெரிய வெங்காயம் விரும்பி வாங்குவதால், விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பகுதியில் ஒரு விலைக்கு சின்ன மற்றும் பெரிய வெங்காயம் விற்பதால், வாடிக்கையாளர் பலர் குழப்பமடைகின்றனர். வாங்கிய பின், 'அடடா...' ஏமாந்து விட்டோமே,' என கவலை அடைகின்றனர்.உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:தெற்கு உழவர் சந்தையில், சின்ன வெங்காயம், 40, பெரிய வெங்காயம், 36 ரூபாய். வடக்கு உழவர் சந்தைக்கு, 630 கிலோ சின்ன வெங்காயம் வருவதால், கிலோ 50 ரூபாய், 620 கிலோ பெரிய வெங்காயம் வருவதால், கிலோ, 40 ரூபாய். வெளிமார்க்கெட்டை விட சந்தையில் வெங்காயம் விலை குறைவாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ