உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் ஹோட்டல் ஸ்ரீ ஆர்யாஸ் திறப்பு

பல்லடத்தில் ஹோட்டல் ஸ்ரீ ஆர்யாஸ் திறப்பு

பல்லடம்:பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே ஸ்ரீ ஆர்யாஸ் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதன் புதிய கிளை பல்லடம் ஒன்றியம், பச்சாம்பாளையம் அம்மன் காம்ப்ளக்ஸில் துவக்கப்பட்டுள்ளது.அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. புதிய கிளையை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திறந்து வைத்தார். பாரத்சாமி, சபரி மலை கீழ் சாந்தி நாராயணன் பொட்டி, திருமலை ஸ்ரீ வாரி கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ், மேயர் தினேஷ் குமார், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக ஸ்ரீ ஆர்யாஸ் ஹோட்டல் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர். திறப்பு விழாவில், பல்லடம் நகர தி.மு.க., செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் சோமசுந்தரம், அசோகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி, குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி