திருப்பூர்;நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், கல்லுாரியில் சேர்ந்து உயர்கல்வி பயில, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்லுாரி, நர்சிங் பயிற்சி, ஐ.டி.ஐ., என ஏதாவது ஒரு உயர்கல்வி பயில வேண்டும் என்று, கலெக்டரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.வறுமை காரணமாக கல்வி தடைபடக்கூடாது என்பதால், தனியார் உதவியுடன் கல்வியை தொடர வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகும், கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடத்தி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.அதன்படி, நேற்று துவங்கி, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, 706ம் எண் அறையில், உயர்கல்வி வழிகாட்டும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, உயர்கல்வியில் சேராத, பிளஸ் 2முடித்த மாணவ, மாணவியர், பெற்றோருடன் வந்து, உதவி மையத்தை அணுகி, கல்லுாரியில் இணைய விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.----------------------கல்வி கற்க தடையேது?பிளஸ் 2 முடித்தவர்கள் உயர் கல்வியில் சேர சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.----------------------தண்ணீர் செல்ல தடையேது?திருப்பூர், தாராபுரம் ரோடு, ஜம்மனை பள்ளம் துார்வாரப்பட்டு 'பளிச்' என காட்சியளிக்கிறது.