திருப்பூர், அவிநாசி மற்றும் காங்கயத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., சார்பில்,பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வாலிபாளையம் பகுதி சார்பில், ராயபுரத்தில் நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் ஆகியோர், நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். பகுதி செயலாளர் கேசவன், மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், அவைத்தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு, தர்பூசணி பழம், இளநீர், நீர்மோர் ஆகியன வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க மாநில தலைவர் அண்ணாமலை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் முன், எம்.எஸ்., நகர் மண்டல் பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது.மாநில செயலாளர் மலர்க்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட நிர்வாகிகள் தங்கராஜ், சீனிவாசன், பாலசுப்ரமணியம், சுமதி முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு குடிநீர், நீர் மோர், லெமன் ஜூஸ், தர்ப்பூசணி ஆகியன வழங்கப்பட்டன. கோடை காலம் முடியும் வரை தினமும் இவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.அவிநாசி வாரச்சந்தை அருகே தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி வழங்கினார். பழங்கரை, துலுக்கமுத்துார் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் நீர்மோர்பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா தலைமை வகித்தார். அவிநாசி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், தெற்கு ஒன்றிய அம்மா பேரவை தலைவர் அண்ணா பூபதி, பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, சுப்பிரமணியம், ஐ.டி., பிரிவு ஹரிஹரன், துரைப்பாண்டி, பூவரசு, பழங்கரை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தனபால், பூண்டி நகர செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.காங்கயம் நகர அ.தி.மு.க., சார்பில், சி.டி.சி., பஸ் டெப்போ முன்புறம் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார். காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெங்கு மணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் குடிநீர், நீர்மோர், இளநீர், தர்பூசணி ஆகியன கோடைக் காலம் முடியும் வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.