உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

மாநகராட்சியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு

அவிநாசி:அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. எனவே, இது குறித்து ஆலோசிக்க அவிநாசிலிங்கம்பாளையம் கம்யூ., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூ., ஒன்றிய துணை செயலாளர் கோபால் தலைமை வகித்தார். தி.மு.க., - அ.தி.மு.க., - மா.கம்யூ., - தே.மு.தி.க., - பா.ஜ., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாநகராட்சியுடன் பழங்கரையை இணைக்க கூடாது. தரம் உயர்த்த வேண்டும் என்றால் பேரூராட்சியாக தரம் உயர்த்தலாம் அல்லது அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்து அதனுடன் இணைப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் கிடைக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், கார்த்திகேயன், தங்கராஜ் (தி.மு.க.,), பாலசுந்தரம், ரங்கசாமி (இந்திய கம்யூ.,), ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி (மா.கம்யூ.,), ஜெகநாதன் (காங்.,), பிரசாத்குமார் (தே.மு.தி.க.,), கோமதி (அ.தி.மு.க.,), பிரகாஷ் (பா.ஜ.,), திருமூர்த்தி (அ.ம.மு.க.,) உட்பட பலர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ