உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பச்சையம்மன் கோவில் திருவிழா

பச்சையம்மன் கோவில் திருவிழா

உடுமலை;உடுமலை பச்சையம்மன் கோவில் திருவிழா வரும் 11ம் தேதி துவங்குகிறது.உடுமலை சின்னவீரம்பட்டி, மணியகாரர் சாளையில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா வரும் 11ல் துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.முதல் நாள் மாலையில் அம்பாளுக்கு தீர்த்தம் எடுத்து வருதல், சக்தி கும்பம் எடுத்தல் மற்றும் சாமி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 12ம் தேதி மாலையில் அம்பாளுக்கு மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனையும் நடக்கிறது.வரும் 13ம் தேதி மூன்றாம் நாள் பக்தர்களின் பால்குடம் எடுத்தல் மற்றும் அம்பாளுக்கு பால் அபிேஷகம் நடக்கிறது. இதில், சின்னவீரம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ