உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக பல்லடம் ஸ்டேஷன் தேர்வு

சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக பல்லடம் ஸ்டேஷன் தேர்வு

பல்லடம் : தமிழகத்தில் மாவட்ட அளவில், சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான கோப்பையை, பல்லடம் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டது.தமிழக போலீஸ்துறையில் ஆண்டுதோறும் குற்றத்தடுப்பு, சட்டம் - ஒழுங்கு பராமரித்தல், வழக்குகளை விரைந்து விசாரித்தல் மற்றும் நவீன கணினி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் சிறப்பாக செயல்படும் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கோப்பை வழங்கி பாராட்டப்படுகிறது.அவ்வகையில், கடந்த, 2022ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களில் திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கோப்பையை டி.ஜி.பி., சென்னையில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரையிடம் வழங்கினார். திருப்பூர் திரும்பிய இன்ஸ்பெக்டர், எஸ்.பி., அபிஷேக் குப்தாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை