உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லாங்குழி சாலை; இடுவாய் மக்கள் இன்னல்

பல்லாங்குழி சாலை; இடுவாய் மக்கள் இன்னல்

திருப்பூர்;திருப்பூர் அடுத்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட, ஆரம்பப்பள்ளியில் இருந்து தான்தோன்றியம்மன் நகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், ஆங்காங்கே குழி ஏற்பட்டுள்ளது. சாலையோர கால்வாயும் பராமரிப்பின்றி இருப்பதால், மழையின் போது, வெள்ளம், சாலையில் பெருக்கெடுக்கிறது; மழைநீர் சாலையில் தேங்கி, சேறு, சகதியாக மாறுகிறது.கோவில், பள்ளி, குடியிருப்பு ஆகியவை உள்ள இந்த இடம், அப்பகுதியின் பிரதானமாக இருந்த போதும், பராமரிப்பு இல்லாமல் இருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இடுவாய் மக்கள் மட்டுமின்றி, திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் மக்களும், அந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' இந்த சாலை செப்பனிடப்பட்டு, பல ஆண்டுகளாகிவிட்டது. புதுப்பித்து கொடுக்க வேண்டும் என, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு வழங்கியுள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை