உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு சாய் சஷ்டி நகர் பொதுமக்கள், நேற்று, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:சாய் சஷ்டி நகரை ஒட்டி நீரோடை உள்ளது. குப்பை, கழிவுகள், முட்புதர்கள் நிறைந்த இந்த நீரோடையை துார்வார வேண்டும் என, பலமுறை வலியுறுத்தினோம். யாரும் கண்டு கொள்ளாததால், நாங்களே எங்களது சொந்த செலவில் ஓடையை துார்வாரினோம்.கடந்த, 15 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வினி யோகம் இல்லை. இவ்வாறு, பல்வேறு அடிப்படை வசதி குறைபாடு இப்பகுதியில் உள்ளது. எனவே, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, பொதுமக்களிடம் பிரச்னைகளை கேட்டறிந்த ஊராட்சித் தலைவர் பாரதி சின்னப்பன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !