- நமது நிருபர் -''தடையின்றி தண்ணீர் கிடைக்கும்; தெரு விளக்குகள் 'பளிச்'சிடும்; சாலைகள் சிறக்கும்; கழிவுநீர் கால்வாய் கட்டமைப்புகள் மேம்படும்...''''மக்கள்தொகை அதிகமுள்ள ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்படும்'' என்ற அமைச்சர் நேருவின் அறிவிப்பு, மக்களிடம் இதுபோன்ற ஆவலை துாண்டி விட்டிருக்கிறது.திருப்பூர் மாநகராட்சியுடன், அருகேயுள்ள ஏழு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டு, அந்தந்த ஊராட்சி தொடர்பான விவரங்களை அரசு பெற்றிருக்கிறது. ஆனால், இணைப்பு நடவடிக்கைக்கு ஊராட்சி நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.பறிபோகும் அதிகாரம்ஊராட்சி தலைவர்களுக்கு, 'செயல் அலுவலர்' என்ற கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. ஊராட்சியின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கண்காணிக்க மற்றும் கவனிக்கக்கூடிய அதிகாரம், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கிராம ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், அதிகாரம் பறிபோகும் என்பது, ஊராட்சி தலைவர்களின் கவலை.ஆறுதல் தரும் நுாறு நாள் வேலைமகாத்மா காந்தி தேசிய நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும், நுாற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்து பணிபுரிகின்றனர். இணைப்பு நடவடிக்கையால், நுாறு நாள் திட்டம் கைநழுவும்; இதனால், ஏராளமானோர் வேலை வாய்ப்பு இழப்பர் என்பது, இணைப்பு நடவடிக்கை மீது பிணைப்பு இல்லாமல் போவதற்கான மற்றொரு காரணம்.---
மனம் கவருமா மாநகராட்சி?
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்பட்டால், என்னென் பலன் கிடைக்கும்; மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலை எந்தளவு உயரும்; உட்கட்டமைப்புகள் எந்தளவு மேம்படும் என்பது போன்ற மாநகராட்சியால் கிடைக்கும் பலன்களை, மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சியுடன், ஏற்கனவே, இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகள், தற்போது எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதையும் விளக்கினால், மக்கள் தெளிவு பெறுவர்.ஏன் இணைக்கக்கூடாது?திருப்பூர் மாநகராட்சியுடன், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளில், இதுவரை எவ்வித வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, மாநகராட்சிக்கு இணையாகவே செய்து கொடுத்து வருகிறோம்.மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் நில மதிப்பு உயரும்; இதனால், ஏழை, நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவு, கைகூடாது. மாநகராட்சியின் பல இடங்களில் ரோடு, குடிநீர், சுகாதாரம் போன்றவை சரியாக இல்லை; ஊராட்சி தலைவர்களை எளிதாக அணுகி குறைகளை சுட்டிக்காட்டுவது போன்று, மாநகராட்சி அதிகாரிகளை எளிதாக சந்திக்க முடியாது; கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேறாது. எனவே, இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும்.- கணேசன்ஊராட்சி தலைவர்இடுவாய்