உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்

முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்

திருப்பூர்;பங்குனி உத்திரத்தையொட்டி, பூச்சக்காடு விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பங்குனி உத்திர நாளில், முருகன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இந்தாண்டு, பங்குனி உத்திர நட்சத்திரம், நேற்று மதியம் துவங்கி, இன்று காலை, 11:30 மணி வரை உள்ளது.பெரும்பாலான கோவில்களில், நேற்றே பங்குனி உத்திர சிறப்பு பூஜைகள் நடந்தன.வாலிபாளையம், ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு, காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது.கருவம்பாளையம், பூச்சக்காடு விநாயகர் கோவிலில், பங்குனி உத்திர விழா பூஜைகள், அதிகாலை நடந்தது. முருகர் மற்றும் ஐயப்ப சுவாமிகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, உற்சவமூர்த்திக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ