உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெற்றோர் சாலை மறியல்

பெற்றோர் சாலை மறியல்

காங்கயம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காடையூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. நுாற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி அமைந்துள்ள இடத்தில் நீண்ட துாரத்துக்கு மையத்தடுப்பில் இடைவெளி இல்லை. இரு புறங்களிலிருந்தும் பள்ளிக்கு வரும் வாகனங்கள் நீண்ட துாரம் சென்று திரும்பும் நிலை உள்ளது. அவதிப்பட்ட பெற்றோர் நேற்று காலை, பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்து தீர்வு காண போலீசார் அறிவுறுத்தினர். மறியலால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை