உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர் அட்மிஷனுக்கு மறுப்பு அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா

மாணவர் அட்மிஷனுக்கு மறுப்பு அரசு பள்ளியில் பெற்றோர் தர்ணா

பல்லடம்:பல்லடம் அடுத்த அருள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.பெற்றோருடன் வந்த மாணவர் சிலருக்கு சேர்க்கை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளை பெற்றோர் தொடர்பு கொண்டனர். மாணவர்களுக்கு சேர்க்கை வழங்காதது குறித்து விளக்கம் தருமாறு, தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி, பெற்றோருடன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் அபிராமி, ரவிச்சந்திரன் மற்றும் பி.டி.ஏ., நிர்வாகி நாகராஜ் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் தங்களுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும், செயல்பாடற்ற இந்த பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் கூறி, மூவரும் ராஜினாமா கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இதனால், பள்ளியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி