உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்கூரை அமைக்கணும் பயணியர் எதிர்பார்ப்பு

நிழற்கூரை அமைக்கணும் பயணியர் எதிர்பார்ப்பு

உடுமலை:உடுமலை தளி ரோடு யூனியன் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரையில்லாததால், பயணியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார் பகுதிகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் பள்ளிகள், நகராட்சி அலுவலகம், யூனியன் ஆபீஸ் அமைந்துள்ளன.இதில் யூனியன் ஆபீஸ் ஸ்டாப்பில் பயணியருக்கான நிழற்கூரை இல்லை. இதனால், அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் நீண்ட நேரம் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு புதிதாக நிழற்கூரை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ