உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், எந்தெந்த வார்டு எங்குள்ளது என்பது குறித்த வழிகாட்டுதல் தெளிவாக இல்லை. குறிப்பாக, மருத்துவமனை நுழைவு வாயிலில் எவ்வித அறிவிப்பும் இல்லாததால், ஒவ்வொரு வார்டு, பிரிவையும் மருத்துவமனைக்கு வருவோர் தேடி அலைகின்றனர். பணியில் உள்ள செக்யூரிட்டி, ஊழியரிடம் எந்தெந்த பிரிவு எங்குள்ளது என பல்வேறு கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.சில தினங்களுக்கு முன், மருத்துவமனை வரைபடம் முகப்பு பக்கத்தில் வைக்கப்பட்டது. இதில், ஏ.பி.சி.டி.இ.எப்., என தளங்கள் பிரிக்கப்பட்டதாக உள்ளது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், இன்னமும் ஒவ்வொரு தளங்களுக்கான பிளாக் பிரிக்கவில்லை. அது குறித்து அறிவிப்பும் வைக்கவில்லை.ஆனால், தனியார் தொண்டு நிறுவனத்தினர் உத்தேசமாக வைக்கப்பட்டுள்ள வரைபட பலகை மருத்துவமனை நாடி வருவோரை மேலும் குழப்பம் வகையில் உள்ளது. இது நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்களை மேலும் குழப்பும் விதமாக உள்ளது. ஏன் அவசர கதியில் இப்படியொரு பலகை வைத்தனர் என தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை