உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவமனையில் கரும்புகை ஓட்டம் பிடித்த நோயாளிகள்

மருத்துவமனையில் கரும்புகை ஓட்டம் பிடித்த நோயாளிகள்

உடுமலை,: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, திடீரென கடுமையான நெடியுடன் புகை சூழ்ந்ததால், அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.அதிர்ச்சியடைந்த 36 நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அலறியடித்து, மருத்துவமனையில் வார்டு பகுதியில் இருந்து வெளியே ஓடினர். தகவலறிந்த உடுமலை தீயணைப்பு துறையினர் மருத்துவமனை வார்டு பகுதிக்குள் நுழைந்து, புகைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். இதில், நேற்று அதிகாலை கழிப்பறையை சுத்தம் செய்ய வந்த துாய்மை பணியாளர், ஆசிட் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை துாவி விட்டு சென்றுள்ளார். இது தெரியாமல், அங்கு சென்ற நோயாளி ஒருவர் தண்ணீர் ஊற்றியுள்ளார். இதில், ரசாயன விளைவு ஏற்பட்டு, கடுமையான நெடியுடன் புகை கிளம்பி, மருத்துவமனையை சூழ்ந்தது தெரியவந்தது.தொடர்ந்து, புகை அடங்கியவுடன், முழுமையாக துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, காலை, 7:00 மணிக்கு மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ