உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிகம் சூழ்ந்தன பாதசாரிகள் பரிதவிப்பு

அதிகம் சூழ்ந்தன பாதசாரிகள் பரிதவிப்பு

திருப்பூர், : திருப்பூர் நகரின் முக்கியமான பகுதியான கொங்கு மெயின் ரோடு, நடைபாதை அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், அகலமான ரோடுகள் தேர்வு செய்து, 'ஸ்மார்ட் ரோடாக' அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நகரின் முக்கியமான ரோடுகளில் ஒன்றான கொங்கு மெயின் ரோடு ஸ்மார்ட் ரோடாக அமைக்கப்பட்டுள்ளது.'ஸ்மார்ட் ரோட்டில்' இரு புறமும் மழை நீர் வடிகால் அமைப்பு, நடைமேடையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடை மேடை மக்களுக்கு பயனில்லாத நிலை உள்ளது. அதற்குப் பதில், அப்பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் இதனை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்கின்றனர்.சில கடைக்காரர்கள் தங்கள் விற்பனை பொருட்களை இதன் மீது பரப்பி வைத்துள்ளனர். பல கடைக்காரர்கள் இதன் மீதே நிரந்தரமாக கடைகளையே அமைத்துள்ளனர். பாதசாரிகள் நடைமேடை மீது நடந்து செல்ல வழியில்லாமல் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டிஉள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறுவதும், சிறுசிறு விபத்து ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நடைமேடை வர்த்தக ரீதியில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து உரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை