உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறக்கும் முன்பே ஊசல்

திறக்கும் முன்பே ஊசல்

பல்லடம் பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்காக, நகராட்சி சார்பில், 59 லட்சம் ரூபாய் செலவில், டூவீலர் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. திறக்கும் முன்பே மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு 'ஷீட்'கள் கழன்று காற்றுக்கு ஊசலாடி வருகின்றன. இத்தகடுகள் கழன்று பலத்த காற்றுக்கு கீழே வீசி எறியப்பட்டால், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேற்கூரை தகடுகளை சரியாக பொருத்துவதுடன், மேற்கூரையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்