காது ஜவ்வு கிழியுதுதிருப்பூர், ராமையா காலனி - பிஷப் பள்ளி ரோட்டில் அதிகாலை நேரத்தில் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் ஆட்டோக்கள் சத்தமாக ஒலி எழுப்பி, காற்று மாசு ஏற்படுத்துகின்றன. இதைக் கண்காணிக்க வேண்டும்.- தண்டபாணி, ராமையா காலனி.வீணாகும் தண்ணீர்திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. அருகிலேயே கால்வாய் இருப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்புள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- ரவி, திருமுருகன்பூண்டி.திருப்பூர், தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு, 60 அடி ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கிருஷ்ணசாமி, வெள்ளியங்காடு. (படம் உண்டு)விதிமீறல் பயணம்நெரிசல் நிறைந்த அம்மாபாளையம் - பூண்டி சாலையில், வாகன ஓட்டிகள் விதிமீறி பயணிப்பது தொடர்கிறது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பதே இல்லை.- சபியுல்லா, அம்மாபாளையம். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், பி.என்., ரோடு, பூலுவபட்டி சிக்னல், சவுடாம்பிகா நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, வெளியேற வழியில்லாமல், கழிவுநீர் தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.- மனோகரன், பூலுவபட்டி. (படம் உண்டு)குழியால் தடுமாற்றம்திருப்பூர், குமார் நகர், முருங்கப்பாளையம் இரண்டாவது வீதியில் உள்ள குழியை மூட வேண்டும். நடுரோட்டில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.- சேகர், வளையங்காடு. (படம் உண்டு)மூச்சுத்திணறல்அவிநாசி, சேவூர் ரோடு, குரும்பபாளையம், சரவணா நகரில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.- சிரஞ்சீவி, சேவூர். (படம் உண்டு)ரியாக் ஷன்உடைப்பு சீரானதுதிருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதி - மெஷின் வீதி சந்திப்பில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், குழாய் உடைப்பு சீர் செய்யப்பட்டது.- சங்கர்சதீஷ், மெஷின் வீதி. (படம் உண்டு)குப்பை மாயம்திருப்பூர் மண்ணரை - ராக்கியாபாளையம் ரோடு, பால்வாடி அருகே குப்பை தேங்கியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி ஊழியர் மூலம் குப்பை அள்ளப்பட்டு விட்டது.- வெங்கடேஷ், மண்ணரை. (படம் உண்டு)திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில், இடதுபுற வீதியில் குப்பை தேங்கியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், குப்பை அள்ளப்பட்டுள்ளது.- ராஜகோபால், திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)