உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று துவங்குகிறது

பிளஸ் 2 துணைத்தேர்வு இன்று துவங்குகிறது

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 607 பேர் மட்டும் தோல்வியை தழுவினர்.தேர்வில் தோல்வியடைந்த, தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு இன்று, துணைத்தேர்வு துவங்குகிறது. ஜூலை முதல் வாரம் வரை தேர்வு நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பக்தவச்சலம் கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், 2019, 2020ம் ஆண்டுகளில் முதலிடம் பெற்ற திருப்பூர், 2023ல் மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று சாதித்தது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்ற, நடப்பு கல்வியாண்டிலே அடுத்த வகுப்புக்கு சென்று விட வேண்டும் என்பதற்காகவே துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் தவறாது தேர்வெழுத வர வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை