கடன் பிரச்னையால் தற்கொலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் முருகன், 52. இவர் திருப்பூர் மங்கலம் ரோட்டில் தனது குடும்பத்துடன் தங்கி, ஒப்பந்த முறையில் கட்டட தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு, போதையில் சந்தைபேட்டை பின்புறத்தில் கட்டடத்தில் துாக்குமாட்டி இறந்தார். சென்ட்ரல் போலீசார் விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். ஒடிசாவை சேர்ந்த அங்கட் பெஹரா, 28 என்பது தெரிந்தது. சோதனையில், அவரிடம் ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். டூவீலர் விபத்து வாலிபர் பலி
கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 23; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு டூவீலரில் காங்கயம் சென்றார். காங்கயம் - காடையூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், டூவீலருடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர். பிளஸ் 1 மாணவி தற்கொலை
கோவை மாவட்டம், சூலுார் ஒன்றியம், புளியமரத்து பாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி மகள் பிரியதர்ஷினி, 17. பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் பல்லடம் அருகே கரடிவாவியில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு வந்தவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.