உள்ளூர் செய்திகள்

பொங்கல் திருவிழா

உடுமலை;மடத்துக்குளம் அருகே அரியநாச்சிபாளையம் புதுார்மடத்தில், உச்சி மகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுத்திருவிழா கடந்த 20ம் தேதி விநாயகர் பொங்கலுடன் துவங்கியது.தொடர்ந்து, துர்க்கையம்மன் வடிசோறு பூஜை, முனியப்பன் பொங்கல் மற்றும் உச்சி மகாளியம்மன் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.வரும் 28ம் தேதி அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், இரவு, அம்மன் அழைத்தல் மற்றும் அபிேஷக அலங்கார பூஜைகள் நடக்கிறது. 29ல் பூவோடு எடுத்தல், மாவிளக்கு, பொங்கல் திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ