உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கம்பங்கள் இடையூறு ஆக்கிரமிப்புக்கும் வாய்ப்பு

மின் கம்பங்கள் இடையூறு ஆக்கிரமிப்புக்கும் வாய்ப்பு

திருப்பூர்:-திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டு, இ.ஆர்.பி., நகரில் சில குறுக்கு தெருக்களும் அமைந்துள்ளன. ரோடு மிகவும் குறுகலான பகுதியாக உள்ளது.ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு கம்பங்கள் ரோட்டின் எல்லையிலிருந்து பல அடி தள்ளி அமைக்கப்பட்டுள்ளன. குறுகலாக உள்ள தெருவில் மேலும், வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி நிலவுகிறது. இப்பகுதியில் தற்போது புதிதாக ரோடும் அமைக்கப்பட்டுள்ளது. ரோடு பணிக்கு முன்பே மின் கம்பங்களை ஓரமாக தள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் ரோடு பணி முடிந்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும்; மின் கம்பங்கள் ரோட்டில் தள்ளி இருப்பதால் அங்குள்ளவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளையும் அதுவரை அமைக்க வாய்ப்புள்ளது. மின் கம்பங்களை ரோடு அளவீடு செய்து இடம் மாற்றி அமைக்க வேண்டும்.---இ.ஆர்.பி., நகரில் சாலையில் இடையூறாக உள்ள மின் கம்பங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ