உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த தபால்

தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த தபால்

பல்லடம் : பல்லடம் பொதுமக்கள் சார்பில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்பப்பட்ட மனு:பல்லடம் வட்டாரத்தில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கறிக்கோழி பண்ணைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள் உள்ளிட்டவற்றின் தகவல் தொடர்புக்கு, பல்லடம் துணை தபால் அலுவலகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.வடமாநில மற்றும்தென் மாவட்ட தொழிலா ளர்கள் ஏராளமானோர் பல்லடம் வட்டாரப் பகுதியில் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்கள், ஊருக்கு மணியார்டர் அனுப்புவது சேவை கணக்கு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் தபால் அலுவலகம் மூலம் பயன் பெறுகின்றனர்.பல்லடம் துணை தபால் அலுவலகத்தில், மதியம், 3.00 மணி வரை மட்டுமே பதிவு மற்றும் விரைவு தபால்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இதனால், திருப்பூர் சென்று தபால் அனுப்பும் நிலை உள்ளதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.அண்ணா நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கிளை தபால் அலுவலகமும் இரண்டு ஆண்டுக்கு முன் மூடப்பட்டது. இவ்வாறு, தபால் அலுவலகத்தின் சேவை படிப்படியாக குறைந்து வருகிறது.எனவே, இதர தலைமை தபால் அலுவலகங்கள் போல், காலை, 8.00 முதல் இரவு 8.00 மணி வரை பல்லடம் தபால் அலுவலகமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !