உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் சங்கத்துக்கு விருது வழங்கல்

சுற்றுச்சூழல் சங்கத்துக்கு விருது வழங்கல்

உடுமலை : உடுமலையில் நடந்த விழாவில், சுற்றுச்சூழல் சங்கத்துக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது.உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், புதிய தொழில் துவங்குவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.கல்லுாரியில் நடந்த நிகழ்வில், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள இளம் தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்றனர்.விழாவின் ஒரு நிகழ்வாக, இயற்கை வள பாதுகாப்பு தினத்தையொட்டி, உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில், சங்க தலைவர் மணி, செயலாளர் நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை