உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு - அவிநாசி 2வது திட்டம் நிறைவேற்ற கோரி இன்று ஆர்ப்பாட்டம்

அத்திக்கடவு - அவிநாசி 2வது திட்டம் நிறைவேற்ற கோரி இன்று ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி 2வது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் உபரி நீரைப் பயன்படுத்தும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.பவானி ஆற்றின் பிறப் பிடமான காரமடை, பவானி சாகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 25 ஊராட்சிகளில் உள்ள, 500 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் வகையில் இத்திட்டத்தின், 2வது நிலையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித்துறையினர், இதற்கான கள ஆய்வுகள் நடத்தி, திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.இத்திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை துவக்க வலியுறுத்தி, இன்று, (28ம் தேதி) காலை, 10:00 மணிக்கு பவானிசாகர் ஒன்றியம், பனையம்பள்ளி ஊராட்சி அலுவலக முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அத்திக்கடவு - அவிநாசி திட்டம் - 2 போராட்ட ஒருங்கிணைப்பு குழு, சிறுமுகை, காவிலிபாளையம் ஒருங்கிணைப்பு குழு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பனையம்பள்ளி கிராமத்தினர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை