உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு  உபகரணம் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு  உபகரணம் வழங்கல்

திருப்பூர்;மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் பல்வேறுவகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கண்பார்வையற்ற, காதுகேளாத, உடல் பாதிப்பு மாற்றுத்திறனாளிகள், உதவி, உபகரணங்களுக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான உபகரணங்கள், கலெக்டர் அலுவலக தரைதரத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்துசேர்ந்துள்ளன.இதனால், பயனாளி மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டு, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று, 90க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், உதவி உபகரணங்கள் பெறுவதற்காக வந்தனர்.ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளி மற்றும் விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருப்போருக்கு, சக்கர நாற்காலி, ஸ்கூட்டர், மொபைல் போன் உட்பட அனைத்து உபகரணங்களையும் அரசிடமிருந்து பெற்று, விரைந்து வழங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !