உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறை கைதிகளுக்கு மனநல ஆலோசனை

சிறை கைதிகளுக்கு மனநல ஆலோசனை

உடுமலை;உடுமலை அரசு மருத்துவமனை சார்பில், சிறை கைதிகளுக்கு மனநல மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.உடுமலை கிளைச்சிறையில், கண்காணிப்பாளர் வைரமுத்து தலைமையில், மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கலைசெல்வி தலைமையில், மருத்துவ குழுவினர், மருத்துவமனை மனநல ஆலோசகர் மணிகண்டராஜ், இளங்கோ வினோத்குமார் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர்.சிறைக்கைதிகளுக்கு, எச்ஐவி பால்வினை நோய், காசநோய் மற்றும் மஞ்சள் காமாலை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. மாதம்தோறும் அவர்களுக்கு, அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவமுகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை