உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி அணுகுமுறையில் புதுமைசுப்பையா பள்ளியின் பெருமை

கல்வி அணுகுமுறையில் புதுமைசுப்பையா பள்ளியின் பெருமை

திருப்பூர்;'புதுமையான கல்வி அணுகுமுறையால், பொது தேர்வில் சாதிக்க முடிந்தது' என, சுப்பையா பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூர், சுப்பையா பள்ளியில், 12ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் பிரிதிவிராஜ், ஹஸ்வந்த் ஆகியோர், 500க்கு 479 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றனர். மாணவி நிவேதா, வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.ஆறு மாணவர்கள், 90 சதவீதத்துக்கும் மேல்; 8 மாணவர்கள், 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனர். தேர்வெழுதிய, 43 மாணவர்களும், 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதலிடம் பெற்ற பெற்ற மாணவி ரோகிதா, 500க்கு 471 மதிப்பெண் பெற்றார். 56 மாணவர்கள், 60 சதவீதத்துக்கும் மேல்; 33 மாணவர்கள், 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றனர்.மாணவர்களை, ஆசிரியர்களையும் பாராட்டிய பள்ளி தாளாளர் சுகுமாரன், பள்ளி முதல்வர் ஆரோக்கிய ஜெரால்டின் ஆகியோர் கூறுகையில், ''மாணவர்களின் இந்த சாதனை, கல்வி முறையின் வெற்றியை காண்பிக்கிறது. கல்வி முறையில் புதிய அணுகுமுறையை கையாள்கிறோம். சராசரியாக படிக்கும் மாணவ, மாணவியரையும், மன அழுத்தம் தராத பயிற்றுவிப்பு முறையால், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற செய்கிறோம். மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய கல்வி அடித்தளத்தை ஏற்படுத்தி தருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ