நுரையீரல், கல்லீரல் சிகிச்சையில், டி.சி.எச்., மருத்துவமனை கூடுதல் கவனம் செலுத்துகிறது.திருப்பூர், குமார் நகர், பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் அருகில் செயல்படும் டி.சி.எச்., மருத்துவனை (திருப்பூர் செஸ்ட் ஹாஸ்பிடல்) தலைமை மருத்துவர் பொம்மு சாமி கூறியதாவது:தற்போது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, அனைத்து வகை நோய், கொரோனாவுக்கு பிந்தைய நுரையீரல் நோய்க்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தற்போது அதிக மூச்சுத்திணறல், சளி, ஆஸ்துமா போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது, கொரோனா காலகட்டத்தில், அவர்களுக்கு எந்தளவு நுரையீரல் பாதிப்பு இருந்தது என்ற அளவை பொறுத்தே அமையும்.தற்போது இவ்வகை நோயாளிகள், அதிக மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பால், நமது நுரையீரல், ஒருவித அலர்ஜி ஏற்பட்டு, அதனால், மூச்சுக்குழல் சுருக்க பிரச்னைகள் ஏற்படுகின்றன.இவர்களுக்கு நடக்கும் போதும், படி, ஏறி இறங்கும் போதும், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும், நுரையீரலின் எதிர்ப்புத்திறனும் குறைவதால், அடிக்கடி தொற்று ஏற்படுகிறது. மிகத்தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், நுரையீரல் தழும்பு ஏற்பட்டு, அதனாலும், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவர்களுக்கு, அதிகப்படியான அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களும் ஏற்படுகிறது.நுரையீரல் பரிசோதனை அவசியம்இதய ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அடிக்கடி நுரையீரல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். எக்ஸ்ரே செஸ்ட், பி.இ.டி., மற்றும் எக்கோ போன்ற பரிசோதனைகள் மிக அவசியம்.அலர்ஜி சம்மந்தப்பட்ட நோய்கள், திருப்பூரில் அதிகம். அதற்கு காரணம், திருப்பூரில் உள்ள காட்டன் தொழில். எனவே, முக கவசம் அணிந்து வேலை செய்வது, சுகாதாரமான சுற்றுச்சூழலை பேணி காப்பது ஆகியன அவசியம். தோல், குடல், நுரையீரல் ஆகியவற்றில் அலர்ஜி ஏற்படுகிறது. ரத்த பரிசோதனை அலர்ஜிக்கான காரணம் கண்டறியப்படுகிறது. ஒவ்வாத உணவுகளை பட்டியலிட்டு, அவற்றை அகற்ற வேண்டும். மருத்துவரின் உரிய ஆலோசனை அறிவுரை பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.