உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதர் மண்டி காணப்படும் காளைகள் பராமரிப்பு கூடம் பழமையான கட்டடத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

புதர் மண்டி காணப்படும் காளைகள் பராமரிப்பு கூடம் பழமையான கட்டடத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

உடுமலை;உடுமலை கால்நடை மருத்துவமனையில், புதர் மண்டி வீணாகி வரும் பழமையான கட்டடத்தை பாதுகாக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, 1946ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கால்நடை மருத்துவமனை உள்ளது. பாரம்பரியம் மிக்கதாக, முன் பகுதி கட்டடம் இன்றளவும் கம்பீரமாக உள்ளது.பின் பகுதியில், 20க்கும் மேற்பட்ட காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிலிருந்து விந்தணுக்கள் எடுக்கப்பட்டு, மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டு வந்தது.இதற்காக, இரு கட்டடங்கள் கட்டப்பட்டு, காளைகள் கட்டுவதற்கான கட்டமைப்புகள், உணவு கொடுக்கும் தொட்டி, புல் கொண்டு வரும் டிராக்டருடன் கூடிய வாகனம் ஆகியவை இருந்தது.தற்போது, 24 மணி நேரம் செயல்படும் பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, தினமும் நுாற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் மட்டுமின்றி, நாய், பூனை என வளர்ப்பு பிராணிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், கால்நடை மருத்துவமனை வளாகத்திலுள்ள பழமையான காளைகள் பராமரிப்பு கூடம், பராமரிக்கப்படாமல், முட்செடிகள், கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. பழமையான கட்டுமானங்கள் வீணாகி வருகின்றன.இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகளவு காணப்படுவதோடு, சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளும், பொதுமக்களும் பாதிக்கும் நிலை உள்ளது.எனவே, கால்நடை மருத்துவமனை வளாகத்தில், காளைகள் பராமரிப்பு கூடத்தை மீட்கவும், பழமையான மற்றும் வரலாற்றுச்சுவடாக காணப்படும் அதனை மீட்கவும் வேண்டும்.அப்போது, கால்நடை வளர்ப்பு மற்றும் இன விருத்திக்காக பயன்படுத்திய பொருட்களை பராமரித்து, காட்சிப்படுத்த வேண்டும். அதே போல், புதிதாக கட்டப்பட்ட கட்டடமும் பராமரிப்பு இல்லாமல், வீணாகி வருகிறது.எனவே, கால்நடை வளாகத்திலுள்ள முட் புதர்களை அகற்றி, கட்டடங்களை பாதுகாக்கவும், பன்முக மருத்துவமனைக்கு தேவையான, கட்டடங்கள், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை