உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்

ரேஷன் ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர்;திருப்பூர், குமரன் ரோடு, லயன்ஸ் கிளப் அரங்கில் இச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. மகளிர் அணி மாநில தலைவர் வசந்தி, மாநில பொருளாளர் சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்ட தலைவர் ராமு முன்னதாக வரவேற்றார். திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரேஷன் கடைகளில் பயன்படுத்தும் பாய்ண்ட் ஆப் சேல் கருவிகள் பழுதுநீக்கம் செய்ய செலவிடப்பட்ட தொகையை, கடை ஊழியர்களிடம் வசூலிக்கும் கூட்டுறவு துறை அதிகாரிகள் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதை ஊழியர்கள் செலுத்தக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.இப்பிரச்னை குறித்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் முறையிடுவது; தீர்வு ஏற் படாவிட்டால் போராட்டம் நடத்துவது சட்டரீதியாக இப்பிரச்னையை எதிர்கொள்வது என்ற முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ