உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் நிறுவனத்தில் வாலிபர் சடலம் மீட்பு

பனியன் நிறுவனத்தில் வாலிபர் சடலம் மீட்பு

அனுப்பர்பாளையம்:திருப்பூர், அவிநாசி ரோடு, அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஸ்டோர் ரூம் அறையில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.நிறுவன ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், 33, என தெரியவந்தது.குடும்பத்துடன் தங்கி இருந்த அவர் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பணியாற்றிய நிறுவனத்தில் துாக்கிட்ட நிலையில், அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி