உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர் விசேஷங்கள் பூக்கள் விலை ஏறுமுகம்

தொடர் விசேஷங்கள் பூக்கள் விலை ஏறுமுகம்

திருப்பூர் : இன்று ஆடி வெள்ளி, நாளை ஆடிப்பெருக்கு, நாளை மறுதினம் ஆடி அமாவாசை என தொடர் விசேஷங்களால் பூக்கள் விலை ஏறுமுகத்தை சந்தித்துள்ளது.திருப்பூர் பூ மார்க்கெட்டில், கடந்த வாரம் மல்லிகைப்பூ கிலோ, 500 ரூபாய், முல்லை கிலோ, 350 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம், இன்று ஆடி வெள்ளி, நாளை ஆடிப்பெருக்கு, நாளை மறுநாள் ஆடி அமாவாசை என அடுத்தடுத்து விசேஷம் வர உள்ளதால், நேற்றே பூ மார்க்கெட் பரபரப்பானது. மல்லிகை பூ கிலோ, 750 முதல், 800 ரூபாய், முல்லை, 450 முதல், 500 ரூபாயாக உயர்ந்தது. அரளி, 150, செவ்வந்தி, 280, சம்பங்கி, 180 ரூபாய்க்கு விற்றது.'இன்றும், நாளையும் தான் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய விலையே தொடருமா என்பது தெரியவில்லை. பூ வருவதை பொறுத்து விலை உயரலாம். சனி, ஞாயிறு விடுமுறையில், அடுத்தடுத்த நாட்களில் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை வந்து விட்டதால், எங்களுக்கு ஒரு நாள் வியாபாரம் மட்டுமே. வெவ்வேறு நாளில் வந்திருந்தால், கொஞ்சம் விற்பனை அதிகரித்திருக்கும்,' என, பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ