உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய கிணறு தோண்ட கவுன்சிலர்கள்... எதிர்ப்பு! கலெக்டரிடம் மனு அளித்து வலியுறுத்தல்

புதிய கிணறு தோண்ட கவுன்சிலர்கள்... எதிர்ப்பு! கலெக்டரிடம் மனு அளித்து வலியுறுத்தல்

திருப்பூர்:மூலனுாருக்கு குடிநீர் எடுப்பதற்காக, புதுப்பை அமராவதி ஆற்றோரம் புதிய கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளகோவில் நகராட்சி கவுன்சிலர்கள், கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் சுதர்சன், புதுப்பை ஊராட்சி தலைவர் குமாரசாமி, வெள்ளகோவில் நகராட்சி கவுன்சிலர்கள் மணி, விஜயலட்சுமி, விஸ்வேஸ்வரன், பிரபு, மணி, ராம்குமார் ஆகியோர் நேற்று, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, மனு அளித்தனர்.இது குறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:வெள்ளகோவில் நகராட்சியில் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். புதுப்பை, அமராவதி ஆற்றோர பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டுவருகிறது. 1980ல் மேலும் ஒரு கிணறு தோண்டப்பட்டு, புதுப்பை ஊராட்சியில் உள்ள, 950 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுவருகிறது.தற்போது, இவ்விரு கிணறுகளுக்கு அருகாமையில், மூலனுார் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் கொண்டுசெல்வதற்காக, மேலும் இரண்டு புதிய கிணறுகள் தோண்டுவதற்காக அளவீடு செய்துள்ளனர்.புதிய கிணறு தோண்டப்பட்டால், ஏற்கனவே உள்ள இரண்டு கிணறுகளின் நீர்மட்டம் சரியும்; தண்ணீர் வற்றிப்போகும் நிலை ஏற்படும். இதனால், வெள்ளகோவில் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும். வறட்சி காலங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும். டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கவேண்டிவரும்.வெள்ளகோவில் நகராட்சி மக்களின் நலன் கருதியும், மக்களுக்கு சீரான குடிநீர், தொடர்ந்து வழங்கும்வகையில், புதிய கிணறு தோண்டும் பணிகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். வேறு இடம் தேர்வு செய்து, கிணறு தோண்ட வேண்டும். கலெக்டரை சந்தித்து, இக்கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்; மனுவும் அளித்துள்ளோம். நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, கவுன்சிலர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை