உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலைப்பணியாளர் ஆலோசனை

சாலைப்பணியாளர் ஆலோசனை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் அவிநாசி உட்கோட்ட சாலை பணியாளர் சங்க 9வது உட்கோட்ட பேரவை கூட்டம் நடந்தது.சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி மாநில பிரதிநிதித்துவ பேரவையை சிறப்பு மாநில மாநாடாக முன்னெடுப்பது; சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி தருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உட்கோட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சிவசாமி வரவேற்றார். கோட்ட இணைச்செயலாளர் விஸ்வநாதன் துவக்க உரை நிகழ்த்தினார். உட்கோட்ட செயலாளர் முருகேசன் செயலாளர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் வெங்கிட்டான், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சின்ராஜ், வட்டார தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி