உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோரம் வாகனங்கள்; போக்குவரத்து பாதிப்பு

ரோட்டோரம் வாகனங்கள்; போக்குவரத்து பாதிப்பு

அனுப்பர்பாளையம்;திருப்பூர், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்பட்டு பறிமுதல் செய்த வாகனங்களை அலுவலகம் முன் ரோட்டோரத்தில் இரு புறங்களிலும் நிறுத்தி உள்ளனர்.இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:பூலுவபட்டி ரிங் ரோட்டில், அதிக அளவில் பனியன் நிறுவனங்கள் உள்ளது. எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.வாகன சோதனை உட்பட பல்வேறு வகைகளில் பிடிபட்ட வாகனங்களை பல மாதங்களாக ரோட்டோரத்தில் நிறுத்தி உள்ளனர்.போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. காலை - மாலை வேலைக்கு செல்வோர் என அதிக போக்குவரத்து இருக்கும்போது போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரோட்டோரத்தில் நிறுத்தி உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை