உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ. 75 லட்சம் மோசடி வழக்கு கவுன்சிலருக்கு பிடிவாரண்ட்

ரூ. 75 லட்சம் மோசடி வழக்கு கவுன்சிலருக்கு பிடிவாரண்ட்

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது நண்பர் கணேசன், 63. திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். கடந்த, 2012ல், கணேசன், பழனிசாமியிடம், 75 லட்சம் ரூபாய் தொழில் மற்றும் குடும்ப செலவுக்காக கடன் பெற்றார்.அதற்காக யூகோ வங்கியின் காசோலை கொடுத்துள்ளார். கடந்த 2013ல், காசோலை அவரது வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பியது. நேரில் கேட்ட போதும், அவர் பணத்தை திருப்பித் தரவில்லை.இதனால், 2013ல், திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் பழனிசாமி காசோலை மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், கடந்த, 2019ம் ஆண்டு, கணேசனுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தும், 75 லட்சம் ரூபாயைத் திரும்பத் தரவும் உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.இதனை எதிர்த்து கணேசன், 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கில் கடந்த 26ம் தேதி, நீதிபதி பத்மா, விரைவு கோர்ட் தீர்ப்பை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். மேலும், ஜாமின் இல்லாத கைது வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிடப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள கணேசனை, கோர்ட் உத்தரவின்படி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ