உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சப்த நதி தீர்த்த வழிபாடு

சப்த நதி தீர்த்த வழிபாடு

அக்னி நட்சத்திரம்' ஆரம்பித்ததை முன்னிட்டும், மழை பொழிய வேண்டியும், பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. 'ஆழிமழைக்கண்ணா' பாசுரம் சேவித்தல் நிகழ்ச்சியும், இதையடுத்து, பால், இளநீர், மஞ்சள், தயிர் ஆகியவற்றால் பெருமாளுக்கு அபிஷேகமும் நடந்தது. சப்த நதி தீர்த்தங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு, அமிர்தவர்ஷினி ராகம் இசைக்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ