உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை:மாணவரை ஊக்குவிக்கும் சாகர் பள்ளி

ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை:மாணவரை ஊக்குவிக்கும் சாகர் பள்ளி

திருப்பூர்:ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சாகர் இன்டர்நேர்ஷனல் பள்ளியில், 10 மற்றும், 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 36 மாணவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.விழாவுக்கு, பள்ளி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் மற்றும் செயலாளர் சவுந்திரராஜன் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, வாழ்த்தி பேசினர். சாகர் பள்ளி அளவில், பிளஸ் 2வில், மாணவி தக்ஷிதா, 500க்கு, 486 மதிப்பெண் பெற்று முதலிடம், ரித்திக் பிரணவ், 485 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஜஸ்வந்த், 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவர் ஸ்ரீஹரி, 500க்கு 481 மதிப்பெண் பெற்று முதலிடம், ஆதித்யவர்ஷன், 479 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், முகந்தியா ஸ்ரீ, 478 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். விழாவில் பள்ளி முதல்வர் ஷீஜா, கல்வி இயக்குநர் சுரேந்திர ரெட்டி, பள்ளி பொருளாளர் பழனிசாமி, உதவி தலைவர் கிருஷ்ணன், உதவி செயலாளர் சாமிநாதன் உட்பட பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்