உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மேலாண் குழு ஆலோசனை

பள்ளி மேலாண் குழு ஆலோசனை

திருப்பூர் : திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பிற்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஈஸ்வரி, வரவேற்றார். தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். மேலாண்மைக்குழுவின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் இக்குழுவில் பெற்றோர் இணைய வேண்டியதன் அவசியம் குறித்து, ஆசிரியை சாரதா பிந்து விளக்கினார்.முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் கோபால், ராமலிங்கம், பாலசுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம், நகராட்சி கவுன்சிலர்கள் பாரதி, வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை