உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆவணம் இன்றி விற்பனை மருந்து கடைக்கு சீல்  

ஆவணம் இன்றி விற்பனை மருந்து கடைக்கு சீல்  

திருப்பூர்:திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர், செல்வமணி, 21. இவரது நண்பர் கோகுல், 23, வலி நிவாரண ஊசி வாங்கி, செல்வமணிக்கு கையில் செலுத்தியுள்ளார். மங்கலம் போலீசார் செல்வமணி, கோகுல் ஆகியோரிடம் விசாரித்த போது, மங்கலம் ரோடு, குளத்துப்புதுாரில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் அதிகளவில் வலி நிவாரண மாத்திரை, ஊசிகளை வாங்கியது தெரிந்தது.கோவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் குருபாரதி உத்தரவில், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் மருந்து இருப்பு குறித்து ஆய்வு நடத்தினர். இதில் மணிகண்டன் என்பவர் கடை நடத்தி வந்ததும், உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிகளவில் மருந்துகளை இருப்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது. மேலும் மருந்துகள் விற்பனையை தடுக்க, மருந்துக்கடைக்கு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை