உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழி தோண்டியதில் கழிவுநீர் குழாய் சேதம்

குழி தோண்டியதில் கழிவுநீர் குழாய் சேதம்

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, தென்னம்பாளையத்தில், செல்வபுரம் குடியிருப்பில் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக குழி தோண்டிய போது கழிவு நீர் செல்லும் வகையில் பதித்திருந்த குழாய்கள் சேதமாகியது.அதிலிருந்து வெளியேறிய கழிவு நீர், குழாய் பதிக்க தோண்டிய குழியில் தேங்கி அவதி ஏற்பட்டது. சேதமடைந்த குழாய்களை சரி செய்யுமாறு, வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தும், ஒப்பந்ததாரர் தரப்பு ஏற்கவில்லை. வேறு வழியின்றி, சீரமைப்பு செய்ய பொருட்களையும் வீட்டு உரிமையாளர்கள் வாங்கிக் கொடுத்தும், உடைந்த குழாய்கள் சரி செய்யப்படவில்லை.இதுகுறித்து அப்பகுதியினர் ஒப்பந்ததாரர் தரப்புக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் புகார் தெரிவித்தனர். கழிவு நீர் குழாய்கள் சரி செய்யாமல் குடிநீர் குழாய்கள் பதிக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கூறினர்.இதனால், குழாய் பதிப்பு பணி, 2 வாரமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லவும், நடந்து செல்லவும் கூட முடியாமல் அப்பகுதியினர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.அப்பகுதியினர் கூறியதாவது: இப்பிரச்னை குறித்து காண்ட்ராக்டர், கவுன்சிலர், மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் இது வரை எந்தப் பயனும் இல்லை. இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியாமல் வந்து தடுமாறும் நிலை உள்ளது. அதிகாரிகள் பணிகள் நடக்கும் இடத்தில் சென்று கண் காணிக்கவும் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை