உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சக்தி விக்னேஷ்வரா பள்ளிமாணவர்கள் சாதனை

சக்தி விக்னேஷ்வரா பள்ளிமாணவர்கள் சாதனை

திருப்பூர் : பெருமாநல்லுார், பொங்குபாளையம், சக்தி விக்னேஷ்வரா கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பில், மாணவி விகாஷினி, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண், அறிவியலில் 95 என 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். நரேன் கார்த்திக் 493 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், இந்துமதி 487 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒருவர்; கணிதத்தில் 5 பேர், சமூக அறிவியலில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.l பிளஸ் 2 பொது தேர்வில், கோகுல் 582 மதிப்பெண்ணுடன் முதலிடம்; ஜித்தேஷ் 572 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம், சேஷாத்திரி 569 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். வணிகவியலில் ஒரு மாணவன், கணினி அறிவியலில் 9 பேரும் 100க்கு 100 மதிப் பெண் பெற்றுள்ளனர்.l பிளஸ் 1 பொது தேர்வில், அபர்ணா 582 மதிப்பெண் பெற்று முதலிடம்; கிஷ்வந்த் 577 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், இளமதி 574 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பொருளியல் பாடங்களில் தலா ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் சக்திவேலுசாமி, தாளாளர் மயிலாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ