உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுகளை கொல்லும் நாய்கள்  கால்நடை வளர்ப்போர் கவலை

ஆடுகளை கொல்லும் நாய்கள்  கால்நடை வளர்ப்போர் கவலை

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், விவசாயத்தில் ஈடுபட்டு வரும விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கறவை மாடு அல்லது ஆடு வளர்ப்பு, பலரது வாழ்வாதாரமாக மறியுள்ளது.இந்நிலையில், ஆட்டுப்பட்டியில் புகும் வெறி நாய்கள், ஆடுகளை கடித்து, தாக்குவது அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, ஆடு வளர்ப்பவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.கடந்த மாதங்களில், ஊத்துக்குளி, காங்கயம் சுற்றுப்பகுதிகளில், வெறிநாய்கள் தாக்கி, பட்டியில் இருந்த ஆடுகள் பலியாகியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடிக்கடி, வெறி நாய்கள் கடித்து, வளர்க்கும் ஆடுகள் பலியாகின்றன.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறு கையில், ''வெறி நாய்களால், ஆடு மட்டுமல்ல, மாடுகள், கன்றுக்குட்டிகளும் பாதிக்கின்றன. வெறிநாய் கடித்து, ஆடுகள் கொத்துக்கொத்தாக செத்தாலும், நிவாரணம் வழங்குவதில்லை. இறைச்சிக்கழிவுகளை உண்டு பழகும் தெருநாய்கள், ஆடுகளை தாக்கி ரத்தம் குடிக்கின்றன.மாவட்ட நிர்வாகம், தெருநாய்களையும், வெறிநாய்களையும் கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை