உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.கே.வி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.கே.வி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, மண்ணரையில் இயங்கி வரும் எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி மாணவர் கார்த்திக் மற்றும் மாணவி நிஷா, தலா, 488 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், மாணவர் ஆகாஷ், 483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் கவுதம் மற்றும் மாணவி விஷ்மிதா, ஆகியோர், தலா, 478 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். கணிதம் பாடத்தில் மூன்று மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளியில், தேர்வு எழுதிய 30 மாணவர்களில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் 14 பேரும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 11 பேரும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மாணிக்கராஜ், செயலாளர் நிஷா, பள்ளி முதல்வர் கோபிநாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !