உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோலார் மானிய திட்டம்; சாய ஆலைகள் எதிர்பார்ப்பு

சோலார் மானிய திட்டம்; சாய ஆலைகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: ''ஏற்றுமதி வர்த்தகத்துடன் நெருங்கிய தொடர்புடைய திருப்பூர் சாயத்தொழிலை பாதுகாக்க, சோலார் மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்'' என, சாய ஆலைகள் எதிர்பார்க்கின்றன.கடந்த 1ம் தேதி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில், தமிழக அரசின் திட்ட கமிஷன் உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கர், பின்ன லாடை ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசினார்.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறுகையில்,''திருப்பூர் வந்திருந்த திட்ட கமிஷன் உறுப்பினர் விஜயபாஸ்கரிடம், பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, சோலார் மானிய திட்டத்தை அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம். 'கார்பன் கிரெடிட்' வழங்குவது போல், திருப்பூருக்கு 'வாட்டர் கிரெடிட்' சான்று வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.தமிழக அரசு 2011ல் வழங்கிய வட்டியில்லா கடன், 200 கோடி ரூபாயை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் சாய ஆலைகளுக்கு, மானியமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.மின் கட்டண உயர்வு என்பது எதிர்கொள்ள முடியாத சவாலாக இருக்கிறது; எனவே, தமிழக அரசு தேவையான உதவியை செய்ய வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ